எடிட்டர் மோகன் குடும்பத்தின் அடுத்த நட்சத்திரம் சினிமாவில் அறிமுகம் ✈✈✈ மோகன் ராஜா, ஜெயம் ரவி ,ஆரவை தொடர்ந்து.......✈✈✈

இன்று தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல நட்சத்திரங்கள் அவர்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் நட்சத்திரங்களாக மாற்றியுள்ளனர்.இந்த வகையில் பல தமது திறமையால் ரசிகர்கள் மனதை கவர்ந்து உள்ளனர் 
இது போல எடிட்டிங் துறையில் இவருக்கு இணை யாரும்  இல்லை என்ற பெயரை எடுத்த எடிட்டர் மோகன் அவரது இரண்டு மகன்களையும் சினிமா துறையில் அறிமுகப்படுத்தினார் அந்த வகையில் மூத்த மகன் ராஜா இன்று சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம்வருகிறார். இளைய மகன் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதை கவர்ந்து நாயகனாக உள்ளார்

இதனை தொடர் நடிகர் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்

இப்போது இயக்குனர் ராஜாவின்  மகன் பிரனவ் விஜய் அன்ரனியின் தமிலரசு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகின்றார்

கருத்துகள்