அரவிந் சுவாமி நட்சத்திரப் பயணம் 🌌08🌌

பின் சில வருடங்கள் இடைவெளியின் பின்னர் கௌதம் கார்த்திக் நடித்த "கடல்"  படத்தில் ஒரு பாதிரியராக ஒரு துணைப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனது வருகையை அழகா உறுதிப்படுத்தினார்
மோகன் ராஜா இயக்கத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்த படமான தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு எதிரான பாத்திரத்தில் மிக அழகாகவும் பொருத்தமாகவும் நடித்திருந்தார்  இப்படத்தில் நடிகரின் பாத்திரத்திற்கு உள்ள முக்கியத்திற்கு நிகரான பாத்திரமாகவே அமைந்தது எதிர்மறை பாத்திரம்.  மித்திரன் என்ற ஜெயம் ரவியின் பெயரை அறிந்தவரை விட சித்தாத் அபிமன்யு என்ற பெயரை அறிந்தவர்கே அதிகம்

தனி  ஒருவன் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ராம்சரன் நாயகனாக நடிக்க அப்படத்திலும் வில்லனாக அரவிந் சுவாமியே நடித்துள்ளார். "துரு"  படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகம் ஆனார்

கருத்துகள்