தீபக் நட்சத்திரப் பயணம் 🌌03🌌

அண்ணி என்ற நாடகத்தில் பாபு ராமநாதன் என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார் இது வரை இவர் நடித்த பாத்திரம் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை ஆனால் இந்த பாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த  நாடகம் 2001 ஆம் ஆண்டு சமுத்திரக் கனி இயக்கத்தில் உருவாகிய நாடகம் இது
இவர் நடித்த மனைவி நாடகத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார் இது மக்களிடையே நல்லவரவேற்பைக் கொடுத்தது இவருக்கு சின்னத்திரையில் ஒரு நிலையான இடத்தைக் கொடுத்தது மனைவி நாடகம்
பின் தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் அந்த வகையில் ராதிகாவின்  நாடகங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே நல்ல மரியாதை உண்டு அந்த வகையில் இவர் செல்லி நாடகத்தில் நடித்தது ரசிகர்களிடம் செல்வதற்கு இலகுவாக அமைந்தது அந்த வகையில் இவர் கடந்து வந்தது ஒன்று இரண்டு அல்ல பல படிகள்

கருத்துகள்