ஜெயம் ரவிக்கு வில்லனாகும் முன்னனி நடிகன்

நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் மிக முக்கிய இடம் வகிக்கும் படம் தனி ஒருவன் படம். இப்படத்தில் நடிகனுக்கு நிகரான காட்சிகள் இருந்தது வில்லனுக்கு .இப்போது தனி ஒருவன் இரண்டாம் பாகம் படமாகும் நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் , நடிகை பற்றிய தகவல் வெளியாக உள்ளது.
        தனி ஒருவன் படத்தின் தொடர்ச்சியாக தனி ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக்குவதால் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகன் நடிகையும் இப்படத்தில்
நடிக்கிறார்கள். இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் மம்முட்டி  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகியாக வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை ஷாயிஷா நடிக்கின்றார்.
        இப்படம் ஜெயம் ரவியின் 25 ஆம் படம் என்பதாலும் வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

கருத்துகள்