த்ரிஷா நட்சத்திரப் பயணம்🌌15🌌

த்ரிஷாவும் NTR உம் இணையும் படத்தில் மற்றொரு நாயகியாக கார்த்திகாவும் நடித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷாவை   NTR  காதலிப்பது போலும் கார்த்திகா NTR ஐ காதலிப்பதாகவும் உள்ளார்.  ‘’Dammu ‘’  இப்படம் வெற்றி படமாகவே அமைந்தது.
         தமிழில் விஷாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்த படம் தான்  ‘’ சமர்..’’ இப்படத்தில் த்ரிஷா அம்மாவின் மருத்துவ செலவிற்காக விஷாலைக் காதலித்து ஏமாற்றும் பெண்ணாக நடிக்கிறார். ஆனால் நடித்து பின் உண்மை காதலாக மாறுவது போல் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சுனைனா ஒரு நாயகியாக நடித்துள்ளார்.

           ஜீவாவுடன் ‘’ தித்திக்குதே’’ படத்தில் ஜோடி சேர்வதாக இருந்தது . ஆனால் அது முடியவில்லை. நீண்ட இடைவெளியின் பின்னர்                  ‘’என்றென்றும் புன்னகை ‘’  படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் பெண்களை வெறுக்கும் ஜீவா மனதில் த்ரிஷா மீதான காதல் பற்றியதே இப்படம். இப்படத்தில் வினய்யும் சந்தானமும் ஜீவாவின் நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்தனர்.

கருத்துகள்