ஓவியாவின் நட்சத்திரப் பயணம் 🌌06🌌

எப்போதுமே தயங்காமல் அறிமுக நாயகர்களுடன் நடிக்கும் நாயகியாகவே  இருந்தார்  அந்த வகையில் அறிமுக நாயகன் கார்த்திக் உடன் நடித்தப் படம்  "மதயானைக் கூட்டம்"  காதல் சண்டை சோகம் சொந்தங்கள் பாசம் என எல்லாம் கலந்த ஒரு கிராமத்துக்கு கருவுடன் உருவாகி வெற்றி வாகை சூடிக்கொண்டது
ஓவியா பிரசன்னா ஜோடியாக நடித்த படம் "புலி வால்" இப்படத்தில் விமல் அனன்யா மற்றொரு ஜோடியாகவும் நடித்துள்ளனர் இப்படத்தின் கதைக்கரு புலி வாலை பிடித்த பின் விட்டால் கடித்து விடும் விடாமல் இருக்கவும் முடியாது போன்ற ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடன் அமைந்தது 
ஓவியா கிருஸ்னா இணைந்த நடித்து பயம் அளித்தப் படம் " யாமிருக்க பயமேன்"  இப்படத்தில் முதல் முறையாக ஓவியா பேய் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பயமும் சிரிப்பும் ஒரு சேரக் கொடுத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப் படமாக உருவாகியது

கருத்துகள்