ஓவியா நட்சத்திரப் பயணம் 🌌03🌌

மீண்டும் இவர் மலையாளத்தில் நடித்தார் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் " Manushy Mrugam " இப்படம் வெற்றி பெற்றாலும் ஓவியாவின் கதாப்பாத்திரம் பேசப்படவில்லை ஆனால் ஓவியாவின் பிரபல்யத்தால் இது தமிழில் போலீஸ் ராஜ்ச்சியம்  என்ற பெயரில் வெளியிடப்பட்டது
"அகராதி" என்ற படத்தில் நடித்தார் இது ரசிகர்களிடையே பயமுறுத்தும்  படமாகவே அமைந்தது இப்படத்தில் நடிகை மோனிக்காவும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் இவர்கள் தோழிகளாக நடித்துள்ளனர் இப்படத்தில் தொடர்ச்சியாக பயமுறுத்தும் காட்சிகள் ரசிகர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிற காரணத்தால் இப்படம் பெரிதாக பேசப்படவில்லை 
ஓவியாவின் வாழ்வின் மிகமுக்கியமான படங்களில் ஒன்று இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த படம் "மெரினா"  கடற்கரையில்  நடைப்பெறும் பல சம்பவங்களில் இவர்களது காதல் கதையும்  ஒரு பாகமாகவே எடுக்கப்பட்டது இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மறுபடியும் தமிழ் சினிமாவில் ஒரு சிறிய அங்கீகாரம் கிடைத்தது இப்படம் மூலம்

கருத்துகள்